அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் தனியார்துறை வேலையில் சேரக்கூடாது :ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அதிரடி உத்தரவு.
அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் தனியார் வேலையில் சேர கூடாது என்றும் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ஓய்வு பெற்ற பிறகு தனியார் வேலையில் சேர்வதற்கு ஒவ்வொரு அரசுத் துறையில் குறிப்பிட்ட கால இடைவெளியியை நிர்ணயித்து உள்ளதாகவும், அந்த கால இடைவெளியை பின்பற்றாமல் உடனடியாக தனியார் துறையில் வேலையில் சேர்வது தவறான நடத்தை ஆகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் பணியில் சேருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஊழல் வழக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தி தடையில்லா சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் தொரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment