நீங்கள் ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களா? இதோ உங்களுக்கான சலுகைகள்! 

அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற நோக்கத்தில் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான திட்டம்  பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா இந்த ஜன்தன் யோஜனா மோடி அரசின் முதல் பதவி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும் .இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் வங்கியில் கணக்கைத் தொடங்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல வகையான நிதி சலுகைகள் கிடைக்கின்றன. கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நெருக்கடி காலங்களில் அரசிடமிருந்து நிதி உதவிகளையும் பெற முடியும் .


*இந்த திட்டத்தில் உள்ள நன்மைகளை பற்றி நாம் விரிவாக பார்க்கலாம் :

 
 ஜன்தன் வங்கி கணக்கில் புதிய 0 இருப்பில் கணக்கை திறக்கலாம் மற்ற வங்கிகளில் கணக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டும் . மேலும் வங்கி சேமிப்பு மற்றும் வைப்புக் கணக்குகள் மற்றும் கடன்கள்  காப்பீடு சாமானியர்களின் ஓய்வூதியம் ஆகியவாற்றை உறுதி செய்கிறது .0 இருப்பு  வசதி கொண்ட இந்த சிறப்பு கணக்கை உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள எந்த வங்கிக் கிளைகளிலும் திறக்க முடியும்.
 *ஜன்தன் வங்கி கணக்கு திறக்க தேவையான விவரம்;
 பெயர்
மொபைல் எண்
 வங்கி கிளையின் பெயர்
 விண்ணப்பதாரர் முகவரி
தொழில்
அல்லது வேலை வாய்ப்பு ஆண்டு வருமானம்

 பல விரிவான தகவல்களுடன் படிவத்தை நிரப்ப வேண்டும்.
 மேலும் சார்ந்து இருப்பவர்கள் எண்ணிக்கை எஸ்எஸ்ஏ குறியீடு அல்லது வார்டு எண் குறியீடு  போன்றவற்றையும் நிரப்ப வேண்டும். இந்தியாவில் அனைத்து குடிமக்களும் அதாவது பத்து வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு குடிமகனுக்கும் இந்த ஜன்தன் வங்கி கணக்கை திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.