உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை தடுக்க பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள்..!


 உதடுகளில் வறட்சியால் ஏற்படும் வெடிப்புகளை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பற்றி பார்ப்போம்.
 பயன்படுத்தப்படும் பொருட்கள் :
*கற்றாழை ஜெல்லை தினமும் உதடுகளுக்கு தடவி வர உதட்டில் உள்ள வறட்சி நீங்கி உதடு வெடிப்பு மறையும்.
* ரோஜாப்பூவில் சிறிது கிளிசரின் சேர்த்து அரைத்து அதனை உதடுகளுக்கு தினமும் இரவில் தடவி வந்தால் உதடுகளின் நிறம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உதடுகளில் ஈரப்பதம் தக்கவைத்து பாதுகாக்கப்படும்.
* வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தாலும் உதட்டின் வறட்சி நீங்கி உதடுகள் மென்மையாக காணப்படும்.
 விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவி வந்தால்  உதடுகள் மென்மையாக காணப்படும்.
* தினமும் தேனை கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தால் உதடுகளில் உள்ள வறட்சி நீங்கி வெடிப்புகள் விரைவில் குணமடையும் உதடு எப்போதும் ஈரப்பசையுடன் காணப்படும்.
* அனைத்து வயதினரும் இந்த இந்த மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தலாம்.