மாணவர்களுக்கு  கல்வி தொலைக்காட்சி மூலம் பயிற்சி :பள்ளி கல்வித்துறை உத்தரவு

 
 மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவே கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
* கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் குறித்த அட்டவணையை அனைத்து மாணவர்களுக்கும் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 *மேலும் பள்ளிகள் திறக்கப்படுவது இப்போதைக்கு இல்லை என்பதால் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 * பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும் பள்ளிக்கு மணவர்களை வரவழைக்கும் போது உரிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நமது தமிழ்செய்தி வலைத்தளத்துடன் இனைந்திருங்கள்  நன்றி.