பித்தம் அதிகரிக்காமல் இருக்க தவிர்க்க வேண்டிய &எடுத்துக்கொள்ள வேண்டிய  உணவுப் பொருள்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்..!

 

 

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்
* அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* அதிக எண்ணெய் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் உண்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
*மது மற்றும் புகை பிடித்தல் பழக்கம் கைவிட வேண்டும்.
* அதிக புளிப்புத்தன்மை உள்ள உணவுகள் அதிக நொறுக்குத்தீனிகள் காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்பதால் உடலில் பித்தம் ஏற்படும்.
  இவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.


 பித்தம் குறைய எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு:பொருட்கள்


*இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் இரண்டு நாட்கள் ஊற வைத்து பின் காலையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
* அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வதால் பித்தத்தை குறைக்கலாம்.
* உடலுக்கு தேவையான தண்ணீரை அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பித்தத்தை குறைக்கலாம்.