தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

 
 தமிழகத்தின் 16வது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது . 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை அடுத்து 16 வது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார்.தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.