முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்க வேலையை ராஜினாமா செய்த அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்!
நாகையை அடுத்துள்ள தெத்தி சமரசம் நகரில் வசித்து வருபவர் புத்தநேசன்.இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள நெடுங்குளம் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கொரோனாவால் மக்கள் படும் அவலங்களையும் மக்கள் படும் அல்லல்களையும் உயிரிழப்புகளையும் தொலைக்காட்சியில் குடும்பத்தோடு பார்த்து ஆசிரியர் தனது அரசு பணியை ராஜினமா செய்து அதில் வரும் பிடித்த தொகைகளை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு எடுத்துள்ளார் .
ஆசிரியர் புத்த நேசன் தனது குடும்பத்தோடு நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கல்வித் துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர் ஆசிரியருக்கு வாழ்த்தும் தெரிவித்தார். மக்கள் படும் இன்னல்களைக் கண்டு தனது மனைவி கோமதி, மகள் சுவாதி ஆகியோரின் சம்மாதத்தோடு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
அரசு தனது ராஜினாமா கடிதத்தை ஏற்று பிடித்த தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து உதவ முன்வந்திருப்பது அனைவருடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ்செய்தி வளைத்தளத்துடன் இணைந்திருங்கள்.
0 Comments
Post a Comment