கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு.? தமிழக அரசு பதிலளிக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!


 நமது தமிழ் செய்தி வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ; கிராமப்புறங்களில் வசிக்கும் அரசு பள்ளி ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் டிஜிட்டல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பெண்கள் 

இயக்கத்தின் செயலர் எஸ்.வாசுகி  தாக்கல் செய்த மனு :


அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு போதிய நிதி வசதி கிடையாது என்றும், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வசதியாக அவர்களால் கணினி ,ஸ்மார்ட்போன் வாங்க முடியாது என்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தவறாமல் ஆன்லைன் பயிற்சி பெற்று வருவதாகவும், ஏழை மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் டிஜிட்டல் வகுப்பறைகளை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் தகுதியானவர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும்  பொருளாதார சமூக ரீதியில் பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆன்லைன் டிஜிட்டல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட,தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்கள் அமைத்து பள்ளிக் கல்வியை மாணவர்கள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது . தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜரானார். மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது