ரிப்பன் மாளிகையில் மீண்டும் நிறுவப்பட்ட 'தமிழ் வாழ்க' பெயர் பலகை

 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகையில் 'தமிழ் வாழ்க, தமிழ் வளர்க' என்ற பெயர் பலகைகள் மீண்டும் நிறுவப்பட்டு திறக்கப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பராமரிப்பு காரணமாக 'தமிழ் வாழ்க, தமிழ் வளர்க' என்ற பெயர் பலகை அகற்றப்பட்டிருந்தது. பலகைகள் அகற்றப்பட்டது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ரிப்பன் மாளிகையில் பராமரிப்பு பணி 90 விழுக்காடு நிறைவடைந்ததையடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அந்தப் பலகைகள் மீண்டும் வைக்கப்பட்டன. பலகைகள் திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.