இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நம்பர் வரை நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு..!

 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் கொரோனா 3-ஆம்அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி  பிரதமரின்ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் வரும் நவம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.