மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா?   *நம் உடலில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகள் நீக்க மஞ்சள் பெரும்பங்கு வகிக்கிறது.
 *பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் என்ற நோயை உண்டாக்கும் ஹுமன் பாப்பிலோமா வைரஸ் தாக்கத்தைக் குறைக்க மஞ்சள் உதவுகிறது.
* மஞ்சள் பூசி குளித்து வந்தால் நம் தோலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.
* மஞ்சளை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்*
 *கடலைமாவுடன் மஞ்சள் கலந்து உடல் முழுவதும் தடவி குளித்து வந்தால் சருமம் அழகு பெறும்
* சந்தனப் பொடியுடன் மஞ்சள் பன்னீர் கலந்து முகத்தில் தடவி உலர விட்டு பின் 10 நிமிடம் கழித்து முகம் கழுவி வர முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் பளபளக்கும்
* பாலில் மஞ்சள் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைத்து வர முகத்தில் உள்ள கருமை நிறம் மாறும் முகப் பொலிவுடன் காணப்படும்
*தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் கலந்து பாதத்தில் தடவி வந்தால் பாத வெடிப்பு பித்த வெடிப்பு போன்றவை குணமாகும்
* எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமத்தின் நிறம் பொலிவு பெறும்
* இவ்வாறு நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் மஞ்சளை நாம் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுவோம்.