அழகுக்காக பயன்படுத்தும் ரோஜாப்பூவில் இத்தனை மருத்துவ குணங்களா. நாமும் தெரிந்து கொள்ளலாமே!

 
 அழகு சாதனப் பொருட்களாக நாம் பயன்படுத்தும் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா நாம் தெரிந்து கொள்ளலாமே
* ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும் .
*இந்த தண்ணீரை உடலில் புண்கள் உள்ள இடங்களில் கழுவி வந்தால் விரைவில் புண் குணமாகும்
*உடலில் வாதம் உள்ளவர்கள் இந்த ரோஜா இதழ் அதாவது 25 கிராம் ரோஜா இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு பால் சர்க்கரை சேர்த்து குடித்துவர வாதம் குணமாகும் பித்த நீர் வெளியேறும்
* இதயத்திற்கு வலிமை தரக்கூடியது
* முகத்தில் ஏற்படும் பருக்கள் ரோஜா இதழ் பன்னீர் கொண்டு முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கி முகம் பளபளக்கும்
* ரோஜா பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் சர்பத் சாப்பிட்டு வந்தால் மூலச் சூடு தணிந்து மலச்சிக்கல் தீரும்
* பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க ரோஜா இதழ்களை தொடர்ந்து காலையில் சாப்பிட்டு வந்தால்  மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்
* உடல் உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கு அதாவது வெப்பம் நிறைந்த இடங்களில் பணிபுரிபவர்களுக்கு ரோஜாப்பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்
*  10 ரோஜாவுடன் சிறிதளவு கற்கண்டு சிறிதளவு தேன் சேர்த்து நன்கு பிசைந்து வெயிலில் உலர வைத்து பின்பு இதனை காலை மாலை இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும் தொடர்ந்து சாப்பிட இதயம் கல்லீரல் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் நன்கு பலப்படும்.