தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் .அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

 
 தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  திரு.மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். 

அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 5, 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கு பரிசோதனை தற்போது செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தொடர்ந்து 36-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்களுடன் காணொளியில் ஆலோசிக்கப்பட்டதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்றும் நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .