தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் இருமடங்கு அரிசி வழங்க உத்தரவு. 


கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடையில் கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மே, ஜூன் மாதத்தில் ஏற்கனவே வழங்கப்படும் அளவுடன் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் இருமடங்கு அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மே மாதத்திற்கான அரிசியை அடுத்த மாதம் கூடுதலாக பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், பிரதமர் மோடி மான் கி பாத் மூலம் உரையாற்றினார். கொரோனாவை தடுக்க தடுப்பூசியே பேராயுதம் என்பதை வலியுறுத்திய மோடி, தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை தவிர்த்து மூக்கில் செலுத்தும் தடுப்பு மருந்துகள் உள்பட மேலும் 3 தடுப்பூசிகள் பரிசோதனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மாதம் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு, மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளி வரை ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.