தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை! 

 
கொரோனா இரண்டாம் அலை காரணமாக நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமே தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தனியார் பள்ளிகளில் பல பள்ளிகள் முழு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் பள்ளி கல்வித்துறை இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ,மெட்ரிக்,ஐஜிசிஎஸ்இ பள்ளிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது .

மேலும் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் செலுத்த கூடாது எனவும் பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.