வரும் கல்வி ஆண்டில் 63 லட்சம் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் -மத்திய அரசு 


வரும் கல்வி ஆண்டில் 63 லட்சம் பட்டியலின மாணவர்களுக்கு மாநில அரசுடன் இணைந்து கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


அதன்படி, 10-ம் வகுப்பு முடித்த, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் உள்ள பட்டியலின மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு முதல் உயர்கல்வி பயிலும் வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.


ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 முதல், 13 ஆயிரத்து 500 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் மாநில அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.