தமிழகத்தில் இவர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு..!

 

 


 தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் ஆறு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 30ஆம் தேதியுடன் தனி அலுவலர் பதவிக்காலம் முடிவடைய உள்ள இந்த நிலையில் அவர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31 வரை நீடிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.