கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி விரைவில் அரசாணை! அமைச்சர் ஐ. பெரியசாமி. 

 
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் .

அதி திமுக ஆட்சியிலேயே விவசாய கடன் தள்ளுபடி 6 சவரன் நகை தள்ளுபடி  செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளது அடுத்த ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி காண அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக ஆட்சியில் விவசாயிகள் அல்லாதோருக்கும் நகை கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும் விரைவில் உண்மை தெரிய வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 5 சவரன் தங்க நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்