தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும். எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
 தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *சேலம்
* கிருஷ்ணகிரி
* வேலூர்
*திருவள்ளூர்
* நீலகிரி
* ஈரோடு

மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 நாளை மழை பெய்யும் மாவட்டங்கள்:
 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய
*நீலகிரி
* கோவை
* தேனி
* திண்டுக்கல்
மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும்  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 29 மற்றும் 30ம் தேதிகளில் மழை பெய்யும் மாவட்டங்கள்;
 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் இன்று முதல் வருகிற ஒன்றாம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது வீசக்கூடும் என்றும் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.