2021 -2022 -ஆம் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் விற்பனை இன்று துவக்கம்.

 
 தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டுக்கான புத்தகங்கள் விற்பனை இன்று தொடங்கியது. அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI  வளாகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட இடங்களில் பாட புத்தகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் பாடப்புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.