+2 பொதுத் தேர்வு எப்போது? முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை! 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பலமுறை ஆலோசனை நடத்திய நிலையில் இன்று முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது? எப்படி நடத்துவது? என்பது குறித்து முதலமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை பொருத்துதான் பொறியியல் மாணவர் சேர்க்கை மருத்துவம் படிப்பு சார்ந்த சேர்க்கைகள் எல்லாம் நடைபெற இருக்கின்றது என தெரிவித்தார். 

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்துவதா? அல்லது மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே நடத்துவதா?போன்ற முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது .மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளைத் தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.