+2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க Mail Id & toll free number பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! 


சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத்தேர்வு  ரத்து செய்யப்பட்டுள்ளதாக  மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் பிளஸ்2  தேர்வு நடத்துவது  தொடர்பாக இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்ட பின் 2 நாட்களில் முடிவெடுப்பதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிரலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 14417 என்ற எண்னை தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் .

 tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் கருத்துக்களை தெரிவிக்கலாம்