புதிய குடும்ப அட்டை வேண்டுமா ? இனி விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கப்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.


 குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு இனி விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 தமிழகத்தில் இன்று 16வது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

 ஆளுநர் பன்வாரிலால் புரோகித் "காலை வணக்கம் தமிழ் இனிமையான மொழி எளிமையான வாழ்க்கை வாழுங்கள்" என கூறி தனது உரையை தமிழில் தொடங்கினார் .
அதன் பின் பேசிய அவர் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.