11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு! 

கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த  2020- 2021 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இது வரை மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படாத நிலையில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
 இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனடியாக  தொடங்க வேண்டும் .


மாணவர்களின்  விருப்பத்திற்கு ஏற்ப  பாடப்பிரிவுகள் ஔதுக்க வேண்டும் என்றும், ஏதேனும் குறிப்பிட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்தால் 15 சதவீதம் வரை மட்டும் அனுமதிக்க வேன்டும்.


 மிக அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் ஜூன் மூன்றாம் வாரத்தில் வகுப்புகள் தொடங்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக தொலைத்தொடர்பு முறையிலும் பாடங்களை நடத்த வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.