வேதம் படித்த அணை அனைத்து ஜாதியினருக்கும் 100 நாட்களில் அரசு வேலை. முதல்வர் மு.க .ஸ்டாலின்


 வேதம் படித்த அணை அனைத்து ஜாதியினருக்கும் 100 நாட்களில் அரசு வேலை. முதல்வர் மு.க .ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  தமிழ்நாடு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .

அதில் 100 நாட்களில் அனைத்து சாதியினர் அர்ச்சகராகின்றனர் என்ற தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பிற்கு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களுக்கும் நன்றிகள் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

அந்த நியமனங்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில், சென்னை கபாலீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். 

மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பணி என்பது பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 பரம்பரை வழி அர்ச்சனை முறை ஒழிக்கப்பட்டு  50 ஆண்டுகள் ஆன பின்பும் இன்று வரை மதுரை மீனாட்சியம்மன் ,பழனி திருச்செந்தூர் முருகர் கோவில் ,ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் பரம்பரை வாரிசு உரிமை அடிப்படையில் தான் நடக்கிறது இது அரசியல் சட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனவும் தமிழகத்தில் அரசு பயிற்சி பள்ளியில் ஆகமம் கற்று தீட்சை பெற்ற இந்து மதத்தின் கவுண்டர், தேவர், வன்னியர், முதலியார், யாதவர், தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பார்ப்பனர் என அனைத்து ஜாதி மாணவர்களின் 10 ஆண்டுகால கோரிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.