தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! 


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், " தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை இரண்டுக்கான நேர்முக தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும் இந்த நேர்முக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகிறது. இதனைப்போன்று ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகள் அடங்கிய உதவி மின் ஆய்வாளர், உதவி பொறியாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனருக்கான கலந்தாய்வு பணி நேர்முகத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுகிறது.

ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற இருந்த துறைத்தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. இந்த தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.