# Breaking :மு .க. ஸ்டாலின் உடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு!


 தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளர்கள் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்க உள்ளார். 

இந்த நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு. க. ஸ்டாலின் உடன் தலைமைச் செயலாளர் ராஜிவ் சஞ்சன்  மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சந்திப்பில் காவல்துறை டி.ஜி.பி திரிபாதி பங்கேற்றுள்ளார். இதில் புதிய அரசு பதவி ஏற்பு மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .மேலும் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்து வருகின்றனர் .மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்தி வளைத்தளத்துடன் இனைந்திருங்கள் நன்றி