#BREAKING: பிளஸ் 2 பொதுத்தேர்வு வரைவு அறிக்கை தயார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்! 


 தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எப்போது நடத்துவது முக்கிய பாடங்களுக்கு மட்டும் நடத்துவதா? என்று மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்தது. மத்திய அரசு விளக்கம் கேட்டு இருந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது தேர்வில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வரின் ஒப்புதலுக்கு பிறகு என்னென்ன மாற்றங்கள் என்பது வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் தமிழகத்தின் கருத்துக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு தமிழகத்தில் கிடையாது எனவும் தமிழக சட்டப் பேரவை கூடியதும் இதற்கு தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளைத்தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.