'வாட்ஸ்அப்' குழுவில் பெற்றோர் பிரதிநிதி- கல்வித்துறை.


''அரசு பள்ளிகளின் கல்விசார்ந்த 'வாட்ஸ்அப்' குழுக்களில் பெற்றோர் ஆசிரியர் பிரதிநிதி கட்டாயம் இருக்க வேண்டும்'' என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கையில், ''கொரோனா பரவலால் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ஸ்அப்' உள்ளிட்ட மொபைல் செயலிகள் வழியாக பாடம் நடத்தி வருகின்றனர்.


இத்தகைய 'வாட்ஸ்அப்' குழுக்களில் பாடம் தவிர்த்து இதர கருத்துகளை பகிரக்கூடாது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது, 'மாணவர்- ஆசிரியர் வாட்ஸ்அப் குழு'க்களை கண்காணிக்க வேண்டும்.

மேலும், 'வாட்ஸ்அப்' குழுக்களில் பெண் ஆசிரியை அல்லது பெற்றோர் சங்க பிரதிநிதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.' என, தெரிவித்துள்ளது.