வாழ்க்கையில் நிறைவேறாத இரண்டு விஷயத்திற்கு வருத்தப்படுகிறேன். சச்சின் டெண்டுல்கர்.


 இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தன் வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் நடக்காததற்கு வருத்தப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலகளவில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் அவரின் சாதனைகள் இன்னும் முறியடிக்க படாமலேயே இருக்கிறது. ஆனாலும் அவருக்கும் வாழ்க்கையில் இரண்டு விஷயம் நடக்காததற்கு வருத்தத்தில் இருக்கிறார் .
இதுகுறித்து கிரிக்கெட் இணையதளத்திற்கு பேசிய அவர் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு வருத்தங்கள் உண்டு  ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உடன் இணைந்து நான் ஒருபோதும் விளையாடியதில்லை. இளம் வயதில் அவர்தான் எனது பேட்டிங் ஹீரோ நான் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவர் ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அணியில் ஒரு வீரராக அவருடன் இணைந்து ஆட வில்லையே என்ற ஏக்கம் எப்போதும் என்னிடம் உண்டு என்றார்.


 எனக்குள் இருக்கும் இன்னொரு வருத்தம் என்னவென்றால் என் சிறுவயது நாயகன் வெஸ்ட்இண்டீஸ் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனது தான் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதிராக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடி இருக்கிறேன் ஆனால் சர்வதேச களத்தில் அவரை எதிர்த்து விளையாட முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இன்னும் உண்டு என்றார் சச்சின் டெண்டுல்கர். மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது  தமிழ்ச் செய்தி வாளைத் தளத்துடன் இனைந்திருங்கள் .