ஊதிய பட்டியலை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அனுமதி வழங்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

 கொரோனா காலகட்டத்தில் கல்வித்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் துறை பணியாளர்கள் மே மாத ஊதிய பட்டியலை தயாரித்து அதனை தலைமை ஆசிரியர் வட்டார கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலர்கள் பெற்று பின்னர் உரிய கருவூலத்தில் சமர்பிக்க வேண்டும். தற்போது குறைந்த பணியாளர்களை கொண்டே மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் செயல்பட்டு வருவதால் ஊதியப் பட்டியல் சமர்பித்த அன்றே பட்டியல் சரிபார்கப்பட்டு காசாக்க வங்கிகளுக்கு அனுப்பப்படுமா?என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்த நிலையில்  தொற்று அபாயம் முழு ஊரடங்கு  காரணமாக   கருவூலத்திற்கு வர முடியாத நிலை தற்போது ஏற்பட்டு உள்ளதால் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த மாத ஊதியப் பட்டியலை ஐ எப் எச்ஆர் எம் எஸ் மூலம் ஆன் லைன் டோக்கன் மூலம் சமர்பித்து விட்டாலே போதும் என்றும், அச்சு நகல் ஊதிய பட்டுவாடா அலுவலர் ஒப்பமிட்டதை  முழு ஊரடங்கு காலம் முடிந்தபின் கருவூலத்தில் சமர்பித்தால் போதும் என்ற வகையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  வலியுறுத்தியுள்ளது.