கொரோனா நிவாரண நிதி- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!


 தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக இந்த மாதம் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார் .

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் வெ இறையன்பு ,நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிவாரண நிதியின் இரண்டாவது தவணை மக்களுக்கு வழங்குவது குறித்தும் ஜி. எஸ்.டி. கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் கொரோனா நிவாரன நிதியின் இரண்டாவது தவனையை வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு தமிழக அரசு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்டுகிறது.மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ்ச்செய்தி வாளைத்தளத்துடன் இணைந்திருங்கள்.