ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். அமைச்சர் அன்பில் மகேஷ்!


 ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது பாலியல் தொந்தரவு புகார் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் பாலியல் புகார் கூறப்பட்ட ஆசிரியரை கல்வி நிறுவனம் பணி இடை நீக்கம் செய்துள்ளதாகவும்,ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு ஏற்கனவே உள்ளது என தெரிவித்தார்.பத்ம சேஷாத்ரி பள்ளியில் மேலும் சில மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார்கள் வந்ததாக அவர் தெரிவித்தார்.ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திருத்தம் கொண்டுவரப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்படும் எனவும், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .நல்ல ஆசிரியர்களுக்கும் கலகம் வரக்கூடாது என்பதற்காக பாலியல் புகார் விவகாரத்தில் குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.