நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும். தமிழக அரசு அறிவிப்பு!


 தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன காய்கறி கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

 அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருவதால் இதனை கணக்கில் கொண்டு சற்று முன் தமிழக அரசு ரேஷன் கடைகள் திறப்பது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 ரேஷன் கடைகள் நாளை முதல் செயல்படும் என்றும் அதாவது காலை 8 மணி முதல்  நண்பகல்12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரேஷன் பொருட்கள்  பெற்றுக்கொள்ள வரும்பொழுது பொதுமக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறு முக கவசம் அணிந்து பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு தமிழக அரசு  பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது