தமிழகத்தில் இனி இதற்கெல்லாம் இப்பதிவு கட்டாயம்- தமிழக அரசு அதிரடி உத்தரவு!

 
 கடந்த இரண்டு வாரங்கள் பொதுமுடங்கம் இருந்த நிலையில் மீண்டும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை, மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தடையின்றி தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்கு வெளியே செல்ல" இ பதிவு" கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த நிலையில் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றாலும் மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் "இ பதிவு "தேவையில்லை என தமிழக அரசு  தெரிவித்திருந்தது. தொழிற்சாலை பணியாளர்கள் அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு" இ பதிவு " கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனி ரயில் மற்றும் விமான  நிலையங்களுக்கு செல்பவர்களுக்கு "இ பதிவு "  கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீடுகளில் இருந்து ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்பவர்கள் மீண்டும் அங்கிருந்து வீடு திரும்புவோர் பயணச்சீட்டு அடையாள அட்டையுடன்"இ பதிவு" கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.