கல்விக் கடன் தர மறுத்தால் என்ன செய்வது ?ஆயிரம் சந்தேகங்கள் 

.
நமது தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக பதிவிடப்படுகிறது. நான் பணியில் இருந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகளாக குடும்ப சூழ்நிலை காரணமாக ஓய்வூதியத்திற்கு வருமான வரி செலுத்த முடியவில்லை .இப்போது புதிதாக எவ்வாறு வருமான வரி கட்ட ஆரம்பிப்பதும் ?ராமராவ் தஞ்சை.

 இணையத்திலும் கணினியிலும் நல்ல பழக்கம் உண்டு என்றால் நீங்களே வருமானவரி வளையத்திற்குள் சென்று பதிவு செய்து விவரங்களை சமர்ப்பிக்கலாம். அல்லது பக்கத்தில் உள்ள பட்டய கணக்காளர்  உதவியை நாடுங்கள் .கடந்த நிதியாண்டுக்கான வருமான வரியை வரும் செப்டம்பருக்குள் செலுத்த வேண்டும்.முந்தைய ஆண்டுக்கான வரியை செலுத்த வேண்டுமென்றால் அதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது .அந்த நிலையில் உங்கள் மொத்த வருவாய் வருமான வரி விலக்கு இருக்குமேயானால் வரி ஏதும் செலுத்த வேண்டாம். கூடுதலாக இருக்குமேயானால் அப்போது வரியோடு சேர்த்து ஆயிரம் ரூபாயை தாமதத்துக்கான அபராதமாக செலுத்த வேண்டும் .

நான் ஒரு ஓட்டிட்டு தளத்தில் சந்தா செலுத்தி உள்ளேன் ஒவ்வொரு மாதமும் ஆட்டோ டெபிட் முறையில் போய்விடுகிறது .இதை எப்படி நிறுத்துவது? பவானி சிவராமன் சுவாமிமலை. ஓ.டி.டி தளங்களில் சந்தாவை நிறுத்தும் வசதியை  எங்கோ மூலையில் மறைத்து வைத்து இருப்பார் அதை கண்டுபிடித்து நிறுத்துவது உங்கள் பாடு .ஆனால் செப்டம்பர் 30-ம் தேதிக்கு பின் வங்கிகள் ஆட்டோ டெபிட் வழங்காது 5 நாட்களுக்கு முன்னரே உங்களுக்கு ஆட்டோ டெபிட் வரப்போகிறது அனுமதிக்கலாமா என்று உங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே பணம் வெளியே போகும். இன்னும் சில மாதங்களில் இது போன்று கண்ணுக்கு தெரியாமல் பணம் கரைவது குறையும். மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நமது தமிழ்செய்தி வளைத்தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.