ஆக்சிஜன் அளவு 90 க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை.கொரோனா சிகிச்சை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் ஆக்சிஜன் அளவு 90 அல்லது 94 ஆக இருந்தால் அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 தமிழக அரசின் மாநில மக்கள்நல்வாழ்வுத்துறை தமிழகத்தில் தொடர் சிகிச்சை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா நோய் தொற்றால்ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் அவர்கள் முதலில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும்கொரோனா சிகிச்சை மையத்தை அணுக வேண்டும். 

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் ஆக்சிஜன் அளவு 90 அல்லது 94 ஆக இருந்தால் அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 ஆக்சிஜன் அளவு 90 அல்லது 94 இருப்பின் அவர்கள்மருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி மாத்திரைகள் எடுத்துக் கொண்டு அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆக்சிஜன் அளவு 90 க்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தரவேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது ..

கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் அளவு 94 கீழே இருந்தால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது