தமிழகத்தில் 4  மருத்துவக்கல்லூரி முதல்வர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!


 கரூர் ,கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய நான்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
*கரூர் மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி முதல்வராக செயற்பட்டு வந்த முத்துச்செல்வன் கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
* தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி விருதுநகர் மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். +மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளைத் தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.