கொரோனா கால ஊரடங்கால் வாடிக்கையாளர்களுக்கு சலுகை காட்டி எஸ்பிஐ! வங்கி உச்சவரம்பு ரூ. 25,000ஆக அதிகரிப்பு.

 
  கொரோனா தொற்று மற்றும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.


 கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லாத மற்ற கிளைகளில் பணத்தை எடுப்பதற்கான வரம்புகளை ரூபாய் 25 ஆயிரமாக அந்த வங்கி நிர்வாகம் அதிகரித்துள்ளது. அதாவது குறைந்த காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் எஸ்பிஐ செக்புக் அல்லது படிவத்தின் மூலம் கணக்கு இல்லாத எஸ்பிஐ கிளைகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கான வரப்புகளை அதிகரித்துள்ளது.  அந்நாட்டுத் செய்தது சேமிப்பு வங்கி  பாஸ்புக் உடன் self என்ற வகையில் மூலம் பணத்தை எடுத்தல் ஒரு நாளைக்கு ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. Self காசோலை மூலம் பணத்தை எடுத்து ஒரு லட்சமாக மாற்றப்பட்டுள்ளது. அதே போல காசோலையை மட்டும்  மட்டும் பயன்படுத்தி மூன்றாம் தரப்பினரால் பணத்தை திரும்பப் பெறுவது ரூபாய் 50,000 ஆக மாற்றப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மூன்றாம் தரப்பினருக்கு படிவங்கள் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கப் படாது என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது. மேலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பினரின் kyc சமர்ப்பிக்கப்பட வேண்டும்.P பிரிவு வாடிக்கையாளர்களுக்கான  ஜூலை 1ஆம் தேதி முதல் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான திருத்தப்பட்ட வரம்பு அமல்படுத்தப்படும் இது செப்டம்பர் 30. 2021 வரை அமலில் இருக்கும். முன்னதாக இரு நாட்களுக்கு முன் ஏடிஎம் மற்றும் கிளைகளில் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதீகளில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும்போது ரூபாய் 15 மற்றும் ஜிஎஸ்ட் என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது .முதல் 4 முறை பணம் எடுக்கும்  போது கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிக்கையில் எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.