தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு-எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?


 வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை
 கடலூர்
கள்ளக்குறிச்சி

 ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான விழுப்புரம்
திருப்பத்தூர்
வேலூர்
ராணிப்பேட்டை
 சேலம்
பெரம்பலூர்
 கிருஷ்ணகிரி
 தர்மபுரி
அரியலூர்

 ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.