18-44 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் பதிவு இல்லாமல் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்-மத்திய அரசு 

18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் பதிவு இல்லாமல் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தற்போது 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு நேரடியாக தடுப்பூசி போடும்  பணி தொடங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த வசதி அரசு தடுப்பூசி மையங்களில் மட்டுமே கிடைக்கும் எனவும் தனியார் தடுப்பூசி மையங்களில் இந்த வசதி கிடைக்காது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 

.இது அந்தந்த மாநில யூனியன் பிரதேச அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் இது தடுப்பூசி வீணாவதை குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கையாகும்.18 -44 வயதுக்கு உட்பட்ட  பயனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு வசதியாக இருக்கும் எனவும் இதனை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உள்ளூர் சூழலின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் மூன்று விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவையாவன; இந்தியாவில் தற்போது மூன்று தடுப்பூசிகள் பயன்படுத்தபடுகிறது. சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்  தயாரித்த கோவாக்சின்  ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.இதுதவிர ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி சில மாநிலங்களில் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.