16 வயது மகளை தடுப்பூசிக்காக அமெரிக்க செல்ல அனுமதிக்க பெற்றோர்உயர் நீதிமன்றத்தில் மனு!


இந்தியாவில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ள இந்த நிலையில் சில பெற்றோர் 18 வயதுக்கு உட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விரும்புகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.

மும்பையின் தென் பகுதியில் வசிப்பவர் விரல்.இவரின் மனைவி பிஜல் தக்கர். இவர்களுக்கு 16 வயதில் மகள் இருக்கிறாள். அவர்களின் மகள் அமெரிக்காவில் பிறந்தவர் எனவே அவருக்கு அமெரிக்காவில் நிரந்நர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மும்பையில் தன் பெற்றோருடன் தங்கி இருக்கிறார் . என்றும் அமெரிக்கா சென்று தடுப்பூசி போட  அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளார்கள். 

பதினோராம் வகுப்பு படிக்கும் எங்கள் மகளுக்கு பள்ளி ஜூலை 1ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னர் அமெரிக்கா சென்று ஊசி போட போதிய கால அவகாசம் இருக்கிறது அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள 21 நாட்கள் அங்கு தங்கிஇருக்கவேண்டி இருக்கும்.  14 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் அவர்கள் விமானதில் தனியாக செல்ல அனுமதிக்கப் பட்டுள்ள போதும் எங்கள் மகளை தனியாக அனுப்புவது பாதுகாப்பாக இருக்காது என்று அந்தப் பெற்றோர்கள் கூறியுள்ளார்கள். 

மகளின் சட்டபூர்வ பாதுகாவலராக அவரின் சித்தியை( பூர்வா) உத்தரவிட வேண்டும் என்றும் இதன் மூலம் பூர்வா எங்களுடன் அமெரிக்கா சென்று வர முடியும் என்றும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அந்தப் பெற்றோரின்மனுமும்பை உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்.