சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு: விரைவில் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் விரைவில் இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என செய்திகள் வெளியாகி உள்ளது

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது தொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சிபிஎஸ்சி வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமான 19 படங்களுக்கு சரியா தவறா என்ற முறையில் வினாக்கள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்த 19 பாடங்களை தவிர மற்ற பாடங்களை உள் மதிப்பீட்டு முறையில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.