தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் .இன்றைய நிலவரம் !
தமிழகத்தில் 3 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்கள் 15 பேர்  அவர்களில் 6 பேர் தனியார் மருத்துவமனையிலும் 9 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.