இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புதிய தேர்தல் ஆணையர் நியமனம். புதிய தேர்தல் ஆணையர் யார்?
இந்தியாவின் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்த சுனில் அரோரா அவர்கள் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இதனை அடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்துள்ளார்.
சுசில் சந்திரா என்பவர் தான் புதிய தலைமை தேர்தல் ஆணையர் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு மே மாதம் வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவியில் இவர் இருப்பார் என்பதும் இந்த காலகட்டத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அந்த தேர்தல் இவரது தலைமையில்தான் நடைபெறும் என்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். சுசில் சந்திரா அவர்கள் நாளை தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி ஏற்க உள்ளார்.
0 Comments
Post a Comment