சென்னையில் அதிகரிக்கும் கொரோனா. எச்சரிக்கும் சுகாதார நிபுணர்! 

கொரோனா வின் இரண்டாம் அலை நாடு முழுவதும்  வேகமாக பரவி வரும் இந்த நிலையில் சென்னையிலும் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் தினசரி பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டி உள்ள இந்த நிலையில் இதே வேகத்தில் கொரோனா பரவினால் வெண்டிலேட்டர் தேவை அதிகரிக்கும் என்றும் ,உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.