சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேர்வு:

 
 தமிழகத்தில் கொரோனா  இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் இந்த நிலையில் இதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு  விதித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக மாநகராட்சி சார்பில் தலா 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேர்வு செய்யும் பணி இன்று துவங்ககி உள்ளது .


*இவர்கள் ஓராண்டு கால ஒப்பந்தத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்


* மருத்துவர்களுக்கு மாத ஊதியமாக 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்


* செவிலியர்களுக்கு மாத ஊதியமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


 இதற்கான நேர்காணல் இன்றும் நாளையும் ரிப்பன் மாளிகையில்  நடக்கிறது.  நேர்காணலில் பங்கேற்பதற்காக 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அசல் சான்றிதழ்களுடன் காலை முதல் வரிசையில் நின்று கொண்டு உள்ளார்கள் இவர்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கோவிட் கேர் மையங்கள்  உள்ளிட்ட இடங்களில் பணி அமர்த்தப்படுவார்கள். பணி நிரந்தரம் செய்யக்கோரி எந்த விதமான ஒரு போராட்டத்திலும் ஈடுபட மாட்டோம் என்பதற்கான ஒப்புதல் படிவத்தில் அவர்கள் கையெழுத்திட்ட பிறகு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.