கொரோனா பாதித்தோர் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி .பீகார் சகோதரர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!!

 பீகாரைச் சேர்ந்த சகோதரர்களான பன்னிரண்டாம் வகுப்பு பயிலும்அர்பித்குமார்  அவரது சகோதரர் பத்தாம் வகுப்பு பயிலும் அபிஜித்குமார் இரண்டு சகோதரர்களும் இணைந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தாலே எச்சரிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

 இவர்களின் கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது. இவர்கள் கண்டுபிடித்த இந்த கருவியின் பெயர் சிடிடிஎம் இந்த கருவியை கண்டுபிடிக்க கடந்த வருடம் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இவர்கள் கடின உழைப்பை செலுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .இந்த கருவியானது பாண்டேஜ் வடிவத்தில் இருக்கும் இதை நாம் அணிந்திருக்கும் அடையில் எளிமையாக பொறுத்திக் கொள்ள முடியும் என்றும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தால் இந்த கருவி சம்பந்தப்பட்ட நபரை எச்சரிக்கும் என்றும் மேலும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்றால்  தொற்று ஏற்படும் அபாயம் எப்போது அதிகரிக்கிறது என்பதை நமக்கு இந்த கருவி கணித்துச் சொல்லும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 மேலும் இந்த கருவியானது உடலின் வெப்பநிலையை கணக்கிட்டு மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் தகவலை தருகிறது என்றும் தற்போது இந்த கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளதாகவும் இந்த மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளைத் தளத்துடன் இனைந்திருங்கள் நன்றி.