டிப்ளமோ தேர்ச்சி மத்திய அரசு வேலைவாய்ப்பு

 மத்திய அரசிற்கு உட்பட்ட இராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் (MES) காலியாக உள்ள அலுவலக Draughtsman மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 502 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனம் (MES)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
Draughtsman - 52
Supervisor - 450

மொத்த காலிப் பணியிடங்கள் : 502

கல்வித் தகுதி :

Draughtsman - Architectural Assistantship துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Supervisor - Economics, Commerce, Statistics, Business, Public Administration போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mesgovonline.com என்ற இணையதளம் மூலம் 12.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.