பிளஸ் 2 பொதுத்தேர்வு.. 15 நாட்களுக்கு முன் புதிய அட்டவணை.. அதிரடி அறிவிப்பு.!

 
தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஏப்ரல் 20 நாளை முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தபடும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும். தேர்வுகள் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.